நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை