2025 ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளி பருவம் இன்று (ஜனவரி 27) தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முதல் பள்ளி பருவம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படும், முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை நடைபெறும்.
மேலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் 11 வரை நடைபெறும் என்றும், மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 9 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.