இடைநடுவில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானிய தூதுவர் Akio Isomata மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றதுடன், எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இராஜதந்திர உறவுகளை பேணுமாறு சஜித் பிரேமதாச தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீள அமுல்படுத்துமாறும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்
சமகி ஜன பலவேகய (SJB) சார்பில் கலாநிதி காவிந்த ஜயவர்தனவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.