2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு, அரசாங்க மீள்வருகை மற்றும் மூலதனச் செலவுகள், பொதுக் கடன் சேவை மற்றும் கடன் மறுசீரமைப்பு செலவுகள் உள்ளிட்டவை இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கணக்கு மீதான வாக்கெடுப்பை இன்றும் நாளையும் (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு தற்போதைய திட்டங்கள் மற்றும் பொதுச் சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கான கணக்கு மீதான இடைக்கால வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
கணக்கு வாக்கெடுப்பு தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என சபையின் சபாநாயகர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நேற்று (04) இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் முன்வைத்த யோசனைக்கு அமைய விவாதம் இடம்பெற்றது.
மேலும், சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.