NDF இன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்


புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணிக்கு (NDF) ஆதரவளிப்பதாக உறுதியளித்த முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றது.
புதியது பழையவை