கரையோரப் பாதை மற்றும் சிலாபம் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
அளுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கரையோரப் பாதையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் புகையிரத சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.