சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன


நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதமும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி திரும்பும் தபால் புகையிரதமும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகம் மற்றும் மட்டக்களப்பு புகையிரத பாதைகளில் சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மட்டக்களப்புப் பாதையில் இயங்கும் புகையிரதங்கள் பொலன்னறுவை வரையிலும், மலையகப் பாதையில் இயங்கும் ரயில்கள் நானுஓயா வரையிலும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை