நாவலப்பிட்டி - டொலொஸ்பாகே வீதியில் மண்மேடு மற்றும் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், நாவலப்பிட்டியின் பல பிரதேசங்களில் மண் மேடுகளுடன் பல மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.