ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது


ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவது தற்போது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநில கால்நடை மருத்துவர்கள் சங்கம் (SVSA) அறிவித்துள்ளது.

நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் இருந்து பன்றி இறைச்சியை கடுமையான நெறிமுறைகளின் கீழ் மனித பாவனைக்காக பதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என SVSA தலைவர் டாக்டர் சிசிர பியசிறி தெரிவித்தார்.  

இதற்கிடையில், பல பண்ணைகள் முற்றாக நாசமடைந்துள்ள நிலையில், வெடிப்பினால் ஏற்பட்ட பாரிய சேதம் குறித்து பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

தங்களின் தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இழப்பீடு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
புதியது பழையவை